நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமானவரித்துறை விசாரணை

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் பனையூர் பங்களாவில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏஜிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பிகில் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு பல கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அவரின் பனையூர் பங்களாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவரிடமும், அவரது மனைவி சங்கீதாவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய தகவல் பரவியதும், விஜய் வீடு முன்பு ரசிகர்கள் திரண்டதால் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version