டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்தன. ஈரப்பதம் அதிகமுள்ள நெல்மணிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற டெல்டா விவசாயிகளின் கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசின் வேளாண் தர கட்டுப்பாட்டு குழுவினர், ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய வேளாண் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் இந்திய உணவு காப்பீட்டு கழக அதிகாரிகள், வேளாண் மண்டல அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் நெல் மணிகளின் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். இதேபோல், குண்டூர், மணிகண்டம், நவலூர், மணப்பாறை, மரவானூர் ஆகிய பகுதிகளில் நெல் மணிகளின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் நெல்பயிர்கள் கடும் சேதம் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: Delta districtsheavy damageIncessant rainsPaddy cropsThrichy
Related Content
டெல்டா மாவட்டங்களில் 10ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!
By
Web team
March 7, 2023
ஸ்ரீ ரங்கத்தில் தைப்பூச தேரோட்டம்!
By
Web team
February 3, 2023
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன !
By
Web team
February 2, 2023
பருத்து கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி!
By
Web team
February 1, 2023
மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளில் மெத்தனம்
By
Web Team
June 12, 2021