உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பதவியேற்பு

 ஊரக, உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வேட்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி இன்று பதவியேற்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 20 ஒன்றியங்களில் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் முன்னிலையில் பதவியேறுக் கொண்டனர். பதவி ஏற்று கொண்டவர்களுக்கு ஊராட்சி அலுவலக வளாகத்தில் அவர்களது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தில், நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பெண்கள் உட்பட 16 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Exit mobile version