உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 9 நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபத எம்.எம். சுந்தரேஸ் உள்பட 9 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இடம் காலியானதையடுத்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளின் பெயர்களை கொலிஜீயம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. 22 மாதங்களுக்கு பிறகு புதிய நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் பலம் 33ஆக அதிகரித்துள்ளது. 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, 2027ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக வருவதற்கான வாய்ப்புள்ளது. நாகரத்னா தலைமை நீதிபதியாக வந்தால், இந்திய வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருப்பார்.