மதுரையில் துவங்கியது இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சி

மதுரையில் நடைபெற்ற இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 8 ஆம் ஆண்டாக மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு முறைக்கு பல முறை யோசித்தே பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் பல்வேறு தரப்பு கோரிக்கைகளையும் ஏற்றே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version