மேற்கு வங்க மாநிலத்தில், ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்துள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, மேற்கு வங்காளத்தில் அமித்ஷா தலைமையில், கடந்த 7 ஆம் தேதி முதல் பிரம்மாண்ட ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ரத யாத்திரையால் வன்முறை ஏற்படும் எனக் கூறி, மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றமும் பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி தரவில்லை. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.