அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் அனைத்தும் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்டும் உலோகங்களில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளது.
மறுசுழற்சிப் பொருட்களை உயர்ந்தவையாக மக்கள் கருத வேண்டும் என்பதற்காக, கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்ட பதக்கங்கள் 30 சதவீதம் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட உள்ள 5 ஆயிரம் பதக்கங்களும், 100 சதவீத கழிவுப் பொருட்களின் மூலம் கிடைத்த உலோகங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளன.