சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தொழிலதிபர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி உட்பட 3 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில், முன்ஜாமின் கோரி தொழிலதிபர் வேணு சினிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறநிலையத்துறை ஆணையர் தனப்பால் உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேணு சீனிவாசன் உள்ளிட்டோரை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கடந்த திங்கள் கிழமை முன் ஜாமீன்
மனு விசாரணைக்கு வந்த போது வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாகவும் எனவே முன் ஜாமீன் வழங்க கூடாது என சிலை கடத்தல் தடுப்பு துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.இதனையடுத்து வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தனர்.