திருப்பூரில் பசுமாட்டை துன்புறுத்திய இளைஞர்களை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திருப்பூரில் பசு மாட்டை கடத்திச் சென்று கடுமையாக துன்புறுத்திய வடமாநில இளைஞர்கள் 3 பேரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பெருமாக்கவுண்டன்பாளையம் கிராமத்தில், விவசாயி கந்தசாமி என்பவரது பசுமாடு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், இரவில் கந்தசாமி தனது மாட்டை கட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, பசுமாடு காணாமல் போயுள்ளது. இந்த நிலையில், அருகிலுள்ள கோழிப் பண்ணையில் மாட்டின் சத்தம் வரவே, அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மாட்டை விபரீதமாக துன்புறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version