திருப்பதியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் வழங்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம் என பல்வேறு வகையான தரிசன முறைகள் நடைமுறையில் உள்ளன. ஒரே கட்டணத்தில் மூன்று வகையான டிக்கெட்டுகளை வழங்கி பக்தர்களை பிரித்துப் பார்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பொதுநல வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கடந்த மாதம் தேவஸ்தான நிர்வாகம் விஐபி தரிசன முறையை ரத்து செய்தது. இந்நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள ஸ்ரீவாணி திட்டத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களுடன் கூடிய விஐபி தரிசனமும் பெரிய அளவில் நன்கொடை செய்யும் நன்கொடையாளர்களுக்கு பிரதான பூஜைகள் ஆன தோமாலை, வஸ்திர அலங்காரம், அபிஷேக தரிசனமும் அளிக்க தேவஸ்தான ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.