திருப்பதி கோவிலில், மின்னணு உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தலாம் !

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 20-ம் தேதியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சுவாமிக்கு நடக்க வேண்டிய பூஜைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை  உண்டியல் வருமானம் கிடைத்து வந்த நிலையில், பக்தர்கள் வராத காரணத்தினால் மின்னணு உண்டியல் மூலம் காணிக்கை செலுத்த தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Exit mobile version