திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த, தமிழகத்தைச் சேர்ந்த 38 பேரை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
ஆந்திர மாநிலம், திருப்பதி மலையில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களை அம்மாநில காவல்துறை அவ்வபோது கைது செய்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில், அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 38 பேரை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் செம்மர கடத்தலுக்காக தமிழகத்திலிருந்து வந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.