திருமலை திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்று வரும் பிரமோற்சவத்தில், 8 ஆம் நாள் இரவில், அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் காலையிலும் இரவிலும் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து உற்சவர் மலையப்ப சுவாமி அருள் பாலித்துவருகிறார். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளில், காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், இரவில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து, கண்களை கவரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.