மனைவி கனவில் வந்ததால் பெண்ணாக மாறிய கணவர்

நம் நாட்டில் அதிகமான மக்கள் மூட நம்பிக்கைகளை கடைப்பிடிப்பது உண்டு. அந்த வகையில் ஒரு ஆண், மணமகள் கோலத்தில் 30 வருடங்களாக பெண் போல் வலம் வந்து கொண்டுயிருக்கிறார். இதற்கு காரணம் இவருடயை மனைவி. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

உத்தரப்பிரதேசத்தில் ஜான்பூர் என்ற பகுதியில் 66 வயதுடைய முதியவர் சிந்தாகரன் சவுகான். இவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. சில மாதங்களில் அவருடைய மனைவி உயிரிழந்துவிட்டார். காலம் கடந்து 21 வயது அடைந்தது. அப்போது, வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து இரண்டாவது கல்யாணம் செய்தார். ஆனால், இந்த கல்யாணம் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் போனதால் அந்த பெண்ணை விட்டு விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து விட்டார். பிரிந்த துக்கம் தாங்காமல் அவருடைய இரண்டாவது மனைவி தன்னுடைய உயிரை விட்டுவிட்டார்.

இந்த விசயத்தை சவுகானுக்கு தெரியாமல் எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று அவருடைய பெற்றோர். சவுகானுக்கு வற்புறுத்தி மூன்றாவதாக கல்யாணம் செய்தும் வைத்தனர். அதன் பிறகு குழந்தைகளும் பிறந்தனர். அந்த நேரத்தில் சவுகானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக ஆரம்பித்தது. சில நாள்களில் பெற்றோர் உயிரிழந்தனர். அதன் பிறகு மனைவி, குழந்தைகள் என அனைவரும் உயிரிழந்து விட்டனர்.

இந்த கவலையில் இருந்த சவுகானின் கனவில் ஒரு நாள் இரண்டாவது மனைவி வந்து “இனிமேல் நீ எங்கு போனாலும் மணமகள் கோலத்திலே தான் போக வேண்டும். அப்படி நடந்தால் இனி மேல் எந்த உயிரும் போகாது” என்று சொன்னதும் மணமகள் கோலத்திலே மாறிவிட்டார் சவுகான்.

முதலில் தன் கோலத்தை பார்த்து ஊர் மக்கள் கேலி செய்தனர். அதன் பிறகு தன்னுடைய கதையை கேட்டு பரிதாபத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த மணமகள் கோலத்திற்கு பிறகு எந்த உயிரும் போகவில்லை. நானும் உடல்நலத்தோடு இருக்கிறேன் என்று ஊர் மக்களிடம் தெரிவித்து வருகிறார்.

 

 

Exit mobile version