திருமண மண்டபத்தில் எம்ஜிஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி கருவிகள்

கோவையிலுள்ள சின்னப்ப தேவர் திருமண மண்டபத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி கருவிகள், தற்போதும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1942ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்த, எம்ஜிஆரும், சின்னப்ப தேவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் வாள் சண்டை, குஸ்தி, சிலம்பம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் மிகவும் கைதேர்ந்தவர்களாக கருதப்பட்டனர். சின்னப்பதேவர் இறந்த செய்தியை கேட்ட எம்ஜிஆர், கோவைக்கு சென்று அங்கிருந்து 3 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய நிகழ்வு, அவர்களது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், சின்னப்பதேவர் திருமண மண்டபத்தில் பராமரிக்கப்பட்டு வரும், எம்ஜிஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி கருவிகளை, இன்றளவும் எம்ஜிஆரின் நண்பர்கள் தினமும் வந்து வணங்கி செல்வது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version