கன்னியாகுமரியில் குடும்பத்துடன் மாட்டுவண்டியில் வந்து கிராமியம் போற்றிய ஆட்சியர்

கன்னியாகுமரியில் பண்ணை சுற்றுலா திட்டத்தை குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வந்து மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கொட்டாரத்தில் உள்ள அரசு பழத்தோட்டத்தில் சுற்றுச் சூழல் பூங்கா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதை கிராமிய மணம் மாறாமல் மாட்டு வண்டியில் வந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வடநேரே தொடங்கிய வைத்தார். இந்த பண்ணை சுற்றுலாவில் உணவுப் பூங்கா, நீரூற்று, மீன் வளர்ப்பு தொட்டி, செடிகள் வளர்ப்பு, தென்னை, விவசாயிகள் பசுமை பயிற்சி கூடம், இயற்கை உரம் தயாரிப்பு முறை, மூலிகை தோட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தோட்டம் அமைப்பது, பசுமை மரங்கள் நடுதல் என கிராமியச் சூழல் இடம்பெற்றுள்ளது.

திருவிதாங்கூர் அரச பாரம்பரியத்தை கொண்ட 32 ஏக்கர் கொண்ட பூங்காவில், 16 ஏக்கர் பரப்பில் உள்ள பண்ணை சுற்றுலா பூங்காவை குடும்பத்துடன் சென்று ஆட்சியர் பார்வையிட்டு கிராமியத் தேவையை வலியுறுத்தினார்.

 

Exit mobile version