வீடியோ எடுக்கும் மோகத்தில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலத்தில் வீடியோ எடுக்கும் மோகத்தில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனகம்மா மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் மற்றும் அவரது உறவுக்கார பெண்களான சங்கீதா, சுமலதா ஆகியோர் பொம்மக்கூறு அணை கால்வாயில் இறங்கி விளையாடினர். இதை அவினாஷின் மனைவி திவ்யா கரையோரம் நின்று செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவினாஷ் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயற்சித்த சங்கீதா, சுமலதா ஆகியோரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Exit mobile version