அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91,000ஐ கடந்தது

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்து, 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில், இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பெயினில் 2 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பிரேஸிலில் 2 லட்சத்து 44 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Exit mobile version