திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையோரங்களில் உள்ள புளியமரங்களில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முறையாறு கூட்டுரோட்டில் 300க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. இந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் இந்த புளியமரங்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தற்போது புளியமரங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. 15க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் புளியம்பழங்கள், சாலையோரங்களில் குடிசைகள் அமைத்து சேகரிக்கப்பட்டு பின்னர், செங்கத்தில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.புளியம்பழங்களை இருப்பு வைப்பதற்கு செங்கம் பகுதியில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏசி கிடங்கை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.