மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போன இந்த திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக இன்று துவக்கி வைக்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் அளிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version