டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தண்ணீர் தேங்கிய இடங்கள் மற்றும் கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டன. ராமேஸ்வரம் பகுதிகளில் காய்ச்சல் காரணமாக சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ராமேஸ்வரம் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் ஊழியர்கள் வீடு வீடாக சென்று நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் கிணறுகளில் கம்பூசியா மீன்களை விட்டனர். இந்த கம்பூசியா மீன்கள் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவின் லார்வாக்களை சாப்பிடும் குணமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.