ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலும் வெண்டைக்காயின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள பாண்டியூர் மற்றும் கே.எஸ் மங்களம் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வெண்டை சாகுபடி செய்துள்ளனர். கோடை வெயிலின் காரணமாக கிணற்றுப்பாசனம் மூலம் வெண்டைகாய்கள் பயிரிடப்பட்டு வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், 80 கிலோ வரை வெண்டைக்காய் பறிக்கப்படுகிறது. சந்தைகளில் வெண்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர். கோடை காலத்திலும் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.