ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ள அத்திவரதர்

ஜூலை 31ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க பொது தரிசனத்தில் வருபவர்கள் 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயனக்கோலத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், டோனர் பாஸ், விஐபி பாஸ் வைத்துள்ளவர்கள் ஜூலை 31ஆம் தேதி மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவர் எனக் கூறினார்.

Exit mobile version