விலங்குகள் சரணாலயத்தில், நண்பர்களாக வலம்வரும் நாய்க்குட்டி

ரஷ்யாவில் உள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில், ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்டு நண்பர்களாக வலம்வரும் நாய்க்குட்டியும், ரக்கூனும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இர்கட் பகுதியில் இயங்கிவரும் சிறிய அளவிலான இந்த சரணாலயத்திற்கு மோஸ்கா என்ற ரக்கூன் ஒன்று மற்றொரு சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

தாயிடமிருந்து பிரித்துக் கொண்டுவரப்பட்ட ரக்கூனை மகிழ்விக்கும் விதமாக ப்ரோஸ்கா என்ற நாய்க்குட்டியை அதனுடன் ஊழியர்கள் பழகவிட்டனர். அதிலிருந்து இரண்டும் நண்பர்களாக சகஜமாக உலாவருகின்றன. ஒரே பொம்மையை வைத்து இரு குட்டிகள் விளையாடுவதும், ஒரே உணவை இரு குட்டிகள் உண்டு மகிழ்வதும் தொடர்கிறது.

பாட்டிலில் புகட்டப்படும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்த ரக்கூன், நாய்க்குட்டியை பார்த்து பழகி, தற்போது திட உணவுகளையும் உண்டுவருகிறது. அங்குவரும் பார்வையாளர்கள் ,நட்போடு பழகிவரும் மூன்று மாத வயதுடைய இரு குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Exit mobile version