ராஜபாளையத்தில் வீட்டில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட யானை நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு காணிக்கையாகச் செலுத்துவதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு பெண் யானையை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.
அப்போது கர்நாடக வனத்துறையினர் இந்த யானையை விற்கவோ பிற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று உத்தரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் யானையை பராமரிக்க முடியவில்லை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த முகமதுயூசூப் என்பவரிடம் அவர் யானையை ஒப்படைத்துள்ளார்.
ஆனால் முகமதுயூசூப் இதற்கான முறையாக அனுமதி பெறவில்லை என்பதால், நீதிமன்ற உத்தரவின் படி யானை பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.