முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

சென்னை, பசுமை வழிச்சாலையிலுள்ள முதலமைச்சர் இல்லத்தில் அந்தியூர், பவானி தொகுதியை சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியினர் 1,500 பேர் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை, பசுமை வழிசாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், ஈரோடு புறநகர் மாவட்டம், அந்தியூர், பவானி தொகுதிகளைச் சேர்ந்த திமுக, அமமுக, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 1,500 பேர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜகிருஷ்ணன் தலைமையில் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இனைந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பணன், பல்வேறு நல்ல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதால் மாற்று கட்சியினர் அதிகளவில் அதிமுகவில் இணைந்து வருவதாக தெரிவித்தார். மேலும், முதல்வர் மக்களின் செல்வாக்கை அதிகளவில் பெற்றுள்ளதால் வருகின்ற தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

Exit mobile version