கொட்டும் மழையிலும் லெபனான் நாட்டில் போராட்டம்

லெபனான் நாட்டில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.

லெபனானில் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்த்திருத்தங்கள், புதிய வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அந்த பகுதியில்,
கனமழை பெய்து வரும் நிலையில், குடைகள் பிடித்தும் அந்நாட்டின் தேசிய கொடியை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இந்த போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைவதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

Exit mobile version