நிர்பயா வழக்கில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு மீது விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பகல் 12.30 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வருகிறது