தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக காணப்படும் என்றும் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.