புதிய வடிவில் மீண்டும் பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் பற்றி செய்தி தொகுப்பு.

பஜாஜ் -ன் சிட்டக் ஸ்கூட்டர் 2006க்கு பிறகு விற்பனையை நிறுத்தி இருந்தது. தற்போது புதிய வடிவில் அது சந்தைக்கு வர இருக்கிறது. அது பற்றிய செய்தி தொகுப்பு.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு ஏற்றவாறு எலெக்ட்ரிக் அவதாரத்தில் களமிறங்கியிருக்கிறது பஜாஜ்ன் சிட்டக். செப்டம்பரின் முடிவிலேயே உற்பத்தி துவங்கிவிட்டது என்றாலும், போட்டிமிகுந்த இந்திய இருசக்கர வாகன சந்தையில் புத்தாண்டுப் பரிசாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய சிட்டக்கை நினைவுகூறும் விதமாக, எலெக்ட்ரிக் சிட்டக்கை வடிவமைத்துள்ளது பஜாஜ். இதனுடைய வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. Multi Spoke அலாய் வீல்கள், Stiching, சிங்கிள் பீஸ் சீட், க்ளோவ் பாக்ஸ் ஆகியவை இதனுடன் உள்ளது. இதில் உள்ள LED லைட்டிங், ஆடி கார்களை ஞாபகப்படுத்தும் படி Scrolling இண்டிகேட்டர்கள், Negative LCD டிஜிட்டல் மீட்டர், என பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கபட்டுள்ளன.

அதுவும் சைடு ஸ்டாண்டு, ஃபுட் பெக்ஸ், மிரர்கள், க்ளோவ்பாக்ஸ் ஆகியவை மென்மையாக இயங்குவது ப்ரீமியம் டச். வெவ்வேறு மாதிரியான மெட்டல் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை சிங்கிள் பீஸாகவே தோற்றமளிக்கின்றன. சேட்டக்கின் தரம் மற்றும் ஃபிட் & ஃபினிஷ் மிகவும் அற்புதம்.

வீடுகளில் காணப்படும் 5 Ampere ப்ளக் பாயின்ட்டின் உதவியுடன், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் தேவைப்படும் சார்ஜ் ஏற்றுவதற்குத் தேவைப்படும் மின்சார அளவைத் தெளிவாகக் காட்டுவது இதன் ஸ்பெஷல்; எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால், ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்ஸ் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

கேடிஎம் டீலர்களில் சேட்டக்கை விற்பனை செய்வதில் தீர்க்கமாக உள்ளது பஜாஜ். புனே, பெங்களூரு என்ற வரிசையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. இதனுடைய விலை சரியாக அறிவிக்கப்படவில்லை. Make In India பாணியில், உள்நாட்டு உதிரி பாகங்கள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது பஜாஜ். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது , டிசைன் – தரம் – வசதிகள் ஆகியவற்றில் சொல்லி அடித்துவிட்டது சிட்டக். இது தமிழகத்துக்கு எப்போது வரும் என்ற செய்தி இன்னும் பஜாஜ் தரப்பில் செய்யப்படவில்லை.

எது எப்படியோ, இந்தியாவைச் சேர்ந்த ஒரு டூ-வீலர் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக EV தயாரிப்பில் இறங்கியிருப்பதால், மற்ற நிறுவனங்களும் இதே முறையினை பின் பற்றுவார்கள் என்றே தோன்றுகிறது. இது ஒருவேளை சாத்தியமானால், நம் நாட்டில் காற்று மாசின் அளவைக் குறைக்க முடியும்ணு கூறப்படுகிறது.

Exit mobile version