ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற அமைச்சர் தங்கமணி, அங்குள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவிடம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version