கடந்த 21 நாட்களில் 18 தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது

ஜம்மு காஷ்மீரில் கடந்த 21 நாட்களில் 18 தீவிரவாதிகளை வேட்டையாடியுள்ளதாக ராணுவ கமாண்டர் கே ஜே எஸ் தில்லான் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 14 ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவத்தினர் சென்ற கான்வாயில் ஜெய்ஷ் இ முகமது தீவரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பாலாகோடு என்ற இடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இதில் 350 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21 நாட்களில் 18 தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடியுள்ளதாக ராணுவ கமாண்டர் தில்லான் தெரிவித்துள்ளார்.

இதில் 14 பேர்ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 6 பேர் அந்த இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதிகள் என ராணுவ கமாண்டர் தில்லான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version