தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
போடியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கொட்டகுடி, குரங்கணியில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தடுப்பணை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பெரியகருப்பன், ராஜா ஆகிய இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது ஆற்றை கடந்துதுள்ளனர். அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரார்கள் அவர்களை உடனடியாக மீட்டனர். ஆற்றில் அடித்து வரப்பட்ட 3 ஆடுகள், 2 மாடுகளையும் வீரர்கள் மீட்டனர்.