கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு தொகுதிகள் தவிர்த்து மற்ற 15 தொகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து கர்நாடகா முழுவதும் 11 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசின் பெரும்பான்மைக்கு 112 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் என்பதால், 8 தொகுதிகளிலாவது பா.ஜ.க அரசு வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா அரசு கர்நாடகாவில் ஆட்சியில் நிலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.