திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கேயம் நகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் பேக்கரிகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் கப், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கலந்த பேப்பர் கப் ஆகியவைகளை பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 1 டன் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், 18 வணிக நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிப்பதுடன், நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.