கடலூர் மாவட்டத்தில் 40 ஆண்டு பழமையான குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

கடலூர் மாவட்டம் புவனகிரியருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஆதிவராகநத்தம், பெருமாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு அருகில் நாற்பதாண்டுக்கு மேற்பட்ட பழமையான இலுப்பைக்குளம் உள்ளது. அதிகம் ஆழம்கொண்ட இந்த குளத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைத்துவந்தது. இந்நிலையில் இந்த குளத்தினை தமிழக அரசு சார்பில் தூர்வாரி புதுப்பித்து தர வேண்டுமென புவனகிரி வட்டாட்சியரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற வட்டாட்சியர் தமிழக அரசின் குடிமராமத்து பணிகளின் கீழ் குளத்தை தூர்வார உத்தரவிட்டார். அதனடிப்படையில் முதலில் குளத்தின் கரைகள் பலப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையால் கிராம மக்கள் மிகுந்த மன மகிழ்ச்சியடைந்ததுடன், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version