ஜமாபந்தி நிகழ்ச்சியில் திமுகவினர் மிரட்டல் தொணியில் வாக்குவாதம்

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், அதிகாரிகளிடம், திமுகவினர் மிரட்டல் தொணியில் வாக்குவாதம் செய்தது காண்போரை முகம் சுளிக்கவைத்தது.

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 20 க்கும் மேற்ப்பட்டோர் மக்கள் முன்னிலையில் தேவையற்ற வாக்குவாதங்களை எழுப்பினர். பின்னர் மக்களின் மீது நாற்காலிகாலை வீசி எறிந்த அவர்களை தட்டிகேட்ட அதிமுக வினர்மீது கொலை வெறிதாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மறுநாள் தள்ளிவைக்கப்பட்ட ஜமாபந்தி நிகழ்ச்சியில், பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது அப்போது அங்குவந்த திமுக ஒன்றிய செயளாலர் ரவி அதிகாரிகளிடம் மிரட்டல் தொணியில் ரவுடி போன்று ஒருமையில் மிரட்டியது காண்போரை முகம் சுளிக்கவைத்தது.

Exit mobile version