கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே அமைந்துள்ள செம்பூஞ்சி ஐயனார் கோவிலில் 48 கிராம மலைவாழ் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை சுற்றியுள்ள மலை கிராமங்களில் காணியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். 48 மலைக்கிராமங்களை சார்ந்த காணியின மக்கள் ஒன்றிணைந்து ஆண்டு தோறும் கார்த்திகை முதல் வாரம் செம்பூஞ்சி மலை உச்சியில் உள்ள ஐயனாருக்கு பொங்கல் இட்டு படையல் போட்டு நேர்த்தி கடன் செய்வது வழக்கம். அந்த வகையில், நடந்த இந்த வழிபாட்டில், மழைவாழ் மக்கள் ஒன்றிணைந்து மேளதாளங்களுடன் பழங்களைக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே நடந்து வரும் இந்த பூஜையில், 48 மலை கிராமங்களில் உள்ள ஆதிவாசி பழங்குடி இன மக்கள் பங்கேற்றனர். இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.