திருப்பூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், 7 மணி நேரத்தில் கைவினைப் பொருட்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
திருமுருகன்பூண்டி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், பல வண்ண காகிதங்களை பயன்படுத்தி, 7 மணி நேரத்தில் கைவினைப் பொருட்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, வண்ண காகிதங்களால் குருவி கூடு, பூக்கள், போட்டோ பிரேம், அலங்கார பொருட்கள், பொம்மைகள் என பல கண்கவர் கலைப் பொருட்களை மாணவ மாணவிகள் தயாரித்தனர்.
மாணவ மாணவிகளின் படைப்புத் திறனை வளர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 7 மணிநேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் இந்த கைவினைப் பொருட்களை தயாரித்து மாணவ மாணவிகள் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சாதனை நிகழ்த்திய மாணவ மாணவிகளுக்கு கலாம் புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.