ஓசூர் அடுத்த ராயக்கோட்டை அருகே விளைநில பகுதிகளில் சுற்றிதிரியும் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வருவது வழக்கம். இந்தநிலையில், குட்டிகளுடன் தமிழக எல்லையான ஜவலகிரி வழியாக வந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளன.
15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரு குழுவாக பிரிந்து ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்கம் வனப்பகுதிக்கு வந்த யானைகள் அருகிலுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் தஞ்சம் அடைந்தன. இதையறிந்த பொதுமக்கள் கூச்சலிட்டு வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட முற்பட்டபோது ஆக்ரோஷம் அடைந்த ஒரு யானை பொதுமக்களை விரட்டியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.