வயலில் விவசாயப்பணி செய்துகொண்டிருந்த பெண் அடித்துக் கொலை

வயலில் விவசாய பணி செய்த போது, தனிப்பிரிவு காவலரின் தாயார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நகைக்காக நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்…

ராமநாதபுரத்தை அடுத்த எக்ககுடி கிராமத்தைச் சேர்ந்த வினோத் காம்பிளி. ஏர்வாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிகிறார். இவர் தாயார் தெய்வானை வயது 50 … இவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.அந்த விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வயலில் இருக்கும் கலைகளை எடுக்கக் காலை வயலுக்கு சென்றிருந்தார். வயலுக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த உறவினர்கள், தெய்வானையைத் தேடி வயலுக்குச் சென்றனர். அங்குத் தெய்வானை வயல்வெளி அருகில் உள்ள புதரில் உடலில் காயங்களோடுமயங்கிய நிலையில் கிடந்தார். அவர் உடலில் அணிந்திருந்த தோடு மற்றும் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் பல இடந்திகளில் காயங்களும் இருந்தன. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்திரக்குடி காவல்துறையினர், உயிரிழந்த அம்மையாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினார். எதற்காக தெய்வானை கொலை செய்யப்பட்டார்? நகைக்காகவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version