விருதுநகரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சொக்கநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சொக்கநாத சுவாமி கோயிலில் தேர் பழுதானதால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசால் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு திருத்தேர் செய்யும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நான்கு அடுக்குகளாக திருத்தேர் பணிகள் நடந்து வந்தது. இந்தநிலையில், இன்று காலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவஞானம் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.