ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை, யூகங்களின் அடிப்படையிலானது என்று தமிழக அரசு வாதிட்டது. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரியிருந்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஆலை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அனைத்து வழக்கு விசாரணைகளும் கடந்த 7 ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதி பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்க்கையாக தூத்துக்குடியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.