நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியே.

Exit mobile version