ஐ.என்.எக்ஸ் வழக்கில் ஜாமின் கிடைத்தும் வெளிவர முடியாத சூழலில் ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் கிடைத்தும் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கால், ப.சிதம்பரம் வெளியில் வர முடியாத சூழலில் உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கைது செய்தனர். இதன் பிறகு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 2 பேரின் உத்தரவாதத்தோடு, 1 லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன், வெளி நாடுகளுக்குச் செல்ல கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட போதிலும், அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ப.சிதம்பரம் வரும் 24ம் தேதி வரை சிறையிலிருந்து வெளிவர முடியாத சூழலில் உள்ளார்.

Exit mobile version