மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதிகள்

கோவை மாவட்டம் குறிச்சியில், புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

குறிச்சி பகுதி இடையர்பாளையத்தைசேர்ந்த விமல்குமார்-சந்தனமாரி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு முடித்து, புதுமணத்தம்பதிகள் மாட்டு வண்டியில் அமர்ந்து ஊர்வலமாக சென்றனர். மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அவ்வழியே வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், தாங்கள் மாட்டுவண்டியில் பயணித்ததாக மணமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Exit mobile version