பழங்கால முறையில் பார்க்கப்பட்ட சூரிய கிரகண நிகழ்வு

நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் பழங்கால முறைப்படி சூரிய கிரகணத்தைக் கண்டறியும் நடைமுறை திண்டுக்கல் மாவட்டத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது…

அரியவகை சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் நவீனத் தொலை நோக்கிகள், சூரிய ஒளி கண்ணாடிகள் மூலம் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில், பழங்காலத்தில் உலக்கையை வெறும் தரையில் அல்லது தண்ணீர் நிறைந்த தட்டில் வைத்தால் சூரிய கிரகணம் தொடங்கியவுடன் அந்த உலக்கை நேராக நின்றுகொண்டிருக்கும். கிரகணம் முடிவடைந்தவுடன் உலக்கை தானாக கீழே விழுந்து விடும் என்பது ஐதீகம். அந்த வகையில் கிரகணத்தைக் கண்டறியும் முறை திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பின்பற்றப்பட்டது.

Exit mobile version