இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகள் சிறப்பான சேவை செய்துவந்த மிக்-27 ரக போர்விமானம் இன்றுடன் ஓய்வு பெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள விமானப்படை தளத்தில், மிக்-27 விமானம் இறுதியாக பறந்து, பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில், ஏர் மார்ஷல் உள்ளிட்ட விமான படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகள் சிறப்பான சேவை செய்து, கார்கில் போரில், எதிரிகளை அழித்த இந்த போர் விமானம், இன்றுடன் ஓய்வு பெற்றது. இந்த விமானம் கடந்த 1985ம் ஆண்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டு, தரைப்படைக்கு பக்க பலமாகவும், துல்லியமாகவும் செயல்பட்டு, கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.