இம்மாதம் 3வது வாரத்தில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்

2020 -21 ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பு அதுபற்றி ஆலோசிக்க அமைச்சரவை கூட்டப்படுவது வழக்கம். எனவே இம்மாதம் 3-ம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. தமிழக துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் பட்ஜெட் மீதான விவாதத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் விவாதம் நடத்துவார்கள். 5 நாட்களுக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது. இதனைத்தொடர்ந்து நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டம், அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை உள்ளிட்ட    அலுவல்களுக்காக மேலும் 25 நாட்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version