தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கக் கூடும்

தமிழகத்தில் கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பான அளவை விட வெயில் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்குள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version